உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்துக்கொள்ள விரும்பும் சிறந்த நகரம் எது? என்பது குறித்து இங்கிலாந்து நிறுவனமொன்று நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது வெப்பநிலை, மழைப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் உலகிலேயே துபாய் நகரம் பொதுமக்கள் தாங்கள் குடியேற விரும்பும் முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
துபாயில் சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி ஆகவும் ஆண்டு சராசரி மழை அளவு 68 மி.மீட்டர் ஆகும்.இதற்கமைய,2-வது இடத்தை அபுதாபியும், 5-வது இடத்தை மஸ்கட்டும் பிடித்துள்ளது.
மேலும் 3-வது இடத்தை பஹ்ரைன் நாட்டின் மனாமா நகர் பெற்றுள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள நகரங்களே பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் நகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.