ஜேர்மனியில் முதல் ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரும் 28-ஆம் திகதி முதல் தனியார் கூட்டங்கள், இரவு நேர பார், பப், விடுதிகள், கேளிக்கை கூடங்கள், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பார்வையாளர்கள் என அனைத்திற்கும் தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மக்களை 4-வது டோஸ் செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோவாவேக்ஸ், மற்றும் பயோன்டெக் தடுப்பூசிகளை ஓடர் செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.