நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சில மாதங்களுக்கு நீடிக்காது என்றும் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க (Priyanga Dunusinghe)அபாய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
வரும் நாட்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
விவசாயத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளினால் உள்ளூர் உணவுப் பொருட்களின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த துனுசிங்க, தற்போதைய டொலர் தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து உணவு இறக்குமதிகள் கடுமையாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நுகர்வோர் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.