டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1,000 கொண்டெய்னர் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான கொள்கலன்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, நெத்தலி, உலர் மீன், கொத்தமல்லி மற்றும் பிற மசாலாப் பொருட்கள் உள்ளதாகவும், சில கொள்கலன்களில் உள்ள பொருட்கள் மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கொள்கலன்களை விடுவிப்பது மந்தகதியில் காணப்பட்டமையால் கொள்கலன்கள் குவிந்து, விடுவிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையை விட புதிய கொள்கலன்கள் சேர்க்கப்படுவதாக இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொள்கலன்களை விடுவிப்பதற்காக டொலர்களை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறு வழங்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.