இலங்கையில் இதற்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் இதற்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் நடப்பு ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 79.3 சதவீதம் வீழ்ச்சி காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 336 சுற்றுலாப்பயணிகளும், மார்ச்சில் 4,581 சுற்றுலாப்பயணிகளும் , ஏப்ரலில் 4,168 சுற்றுலாப்பயணிகளும், மே மாதத்தில் 1497 சுற்றுலாப்பயணிகளும் , ஜூனில் 1,614 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இதேபோன்று ஜூலையில் 2,429 சுற்றுலாப்பயணிகளும், ஆகஸ்டில் 5040 சுற்றுலாப்பயணிகளும், செப்டெம்பரில் 13,547 சுற்றுலாப்பயணிகளும், ஒக்டோபரில் 22,771 சுற்றுலாப்பயணிகளும், நவம்பரில் 44,294 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர். அதற்கமைய இவ்வாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை 104,989 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

எனினும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்திற்கும் அதிக சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். அதாவது ஜனவரியில் 228,434 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 207,507 சுற்றுலாப்பயணிகளும், மார்ச்சில் 71,370 சுற்றுலாப்பயணிகளும் மற்றும் டிசம்பரில் 393 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

2020 இல் ஏப்ரல் தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எவரும் வருகை தரவில்லை.

அதற்கமைய கடந்த ஆண்டு 4 மாதங்களில் மாத்திரம் 507,704 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ள போதிலும், இவ்வாண்டில் கடந்த 11 மாதங்களிலும் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *