சுற்றாடல் அமைச்சிலிருந்து காணாமற் போயுள்ள மில்லியன் கணக்கான பணம்

சுற்றாடல் அமைச்சிலிருந்து காணாமற் போயுள்ள மில்லியன் கணக்கான பணம்

சுற்றாடல் அமைச்சிலிருந்த 96 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் உடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மிகுதியாக இருந்த பணமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டது. திட்ட செயற்பாடுகளின் பின்னர் எஞ்சிய 96 மில்லியன் ரூபாய் பணம் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவ்வாறான விளம்பரங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உடனடியாக ஆராய்ந்து, விசாரணை நடத்துமாறு திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *