இலங்கைக்கு உதவி புரிய பல நாடுகள் தயாராக இருப்பதாக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
இன்று (10-01-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் நம் நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து உதவி கிடைக்கவில்லை என்று. அது ஒரு பொய்யான தகவல். என்றும் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் (2022) பல வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் இலங்கை வந்தனர்.
இதில் இருந்தே தெரிகிறது உதவி கிடைக்குமா, இல்லையா என்று. கடந்த காலங்களில் நான் தென் கொரியாவில் இருந்தேன். அப்போது அங்கு நான் அந்நாட்டு கல்வி அமைச்சர்களை சந்தித்து பேசினேன்.
அப்போது அவர் கூறியது நம் நாட்டிற்கு உதவி வழங்குவோம் என்று. நம் நாட்டில் இப்போது பொருளாதார ரீதியாக சிக்கல் காணப்படுகிறது.
இவ்வாறன சூழ்நிலையில் நமக்கு வெளிநாடுகளிலிருந்து உதவி கிடைப்பது சிறந்த விடயம். அதாவது தென்கொரியா பிரதமர் கூறியது 16 நாடுகளில் உள்ள மக்கள் இங்கு பணிபுரிகின்றனர். அந் நாட்டில் தொழில் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அந் நாட்டினரின் உதவி வழங்க முடியும் என்று அவரின் கருத்தாக இருந்தது. நான் கடந்த காலங்களில் அறிந்த விடயம் நம் நாட்டில் இருந்து கொண்டு, நம் நாட்டை பற்றி விமர்சிப்பது என்று.
இவ்வாறு விமர்சனம் செய்வது சுகாதாரம் பற்றிய விமர்சனம் செய்தால் பரவாயில்லை ஆனால், பல நாட்டு தலைவர்களால் ஏற்றுக்கொண்ட தலைவர்களை விமர்சனம் செய்வது தவறு. நம் நாட்டில் மாதத்திற்கு 2 தடவை நாடாளுமன்றம் கூடுவார்கள்.
நாடாளுமன்றம் முடிய அனைத்து அமைச்சர்களுக்கும் அவர்களின் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது. ஆனால், அங்கு அவர்களின் கருத்தை தெரிவிக்காமல் ஞாயிறு சந்தைகளிலும், கூட்டங்களிலும் கூறுவது தவறு என தெரிவித்துள்ளார்.