இலங்கையின் தற்போதைய நிலையில் தனிநபர் கடன் 8 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda AmaraWeera) தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எந்த பக்கம் பார்த்தாலும் வீழ்ச்சியே காணப்படுகிறது. மேலும், வெளிநாட்டுக் கடன்களின் அளவு 17 ஆயிரத்து 200 பில்லியனாக காணப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் தனி நபர் ஒருவரின் மீது 8 இலட்சம் ரூபா அளவிலான கடன் சுமை காணப்படுகிறது. 1970 காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை பொறுப்பேற்கும் போது டொலரின் பெறுமதி 9 ரூபாவாக காணப்பட்டது.மேலும், அவர் நாட்டை வழங்கும் போது டொலரின் பெறுமதி 7 ரூபாவாக இருந்தது. அதன் பின்னர் நாட்டை பொறுப்பேற்ற அனைத்து தலைவர்களும் இந்த கடன் சுமையைக் குறைப்பதில் தோல்வியடைந்துள்ளனர்.