கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விஐபி முனையம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின் விஐபி பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி (Maj. Gen. (Retd.) G. A. Chandrasiri )தெரிவித்தார்.
பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண நபர்கள் மற்றும் நண்பர்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
விமான நிலையத்தில் விமானத்திற்கு அருகில் ஒரு பார்வையாளர் வரவேற்கப்பட வேண்டுமாயின் விமான நிலையத் தலைவர், உபதலைவர் அல்லது முகாமையாளரிடம் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சந்திரசிறி கூறினார்.
போதைப்பொருள் கடத்தலுக்காகத் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் விஐபியின் உதவியுடன் விஐபி பகுதி வழியாக நாட்டிற்குள் நுழைந்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.