பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் – இந்திய எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இக்குண்டு வெடிப்பானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குறைந்தது 3பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. “வெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை அதிகாரி முகமது அபித் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்பின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மாயோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாயோ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியர் இப்திகார் கருத்து வெளியிடுகையில்,

ஒரு சிறுவன் உட்பட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் விற்பனையாளர்களின் கடைகளும் சேதமடைந்தன. அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். குண்டுவெடிப்புக்குப் பிறகு அனார்கலி சந்தை முழுவதும் மூடப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *