இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு விஜயம் செய்த 70 ஆயிரத்திற்கு அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஊடாக கிட்டத்தட்ட 10 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16-01-2022 ஆம் திகதியே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், அன்று 23,342 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் 425 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். அன்றைய தினம் 2,859,840 ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் தினத்தில் 11,617 உள்ளூர் மற்றும் 423 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததுள்ளதுடன், வருமானம் ரூ. 1,840,500 ஆகவும் இருந்தது.

கடந்த சனிக்கிழமை 16,175 உள்ளூர் மற்றும் 493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைத் தந்துள்ளதுடன், அன்றைய தினம் 2,381,340 ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.

போயா விடுமுறை தினத்தில் 18,747 உள்ளூர் மற்றும் 314 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் 2,250,140 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *