மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமையளித்து எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனை நேற்று அறிவித்துள்ளார்.
இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவினத்தில் சுமார் 20% கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒதுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70% வாகனங்களுக்கு எரிபொருளாகவும், 21% மின்சாரம் தயாரிக்கவும், 4% மட்டுமே தொழில்துறை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.கோவிட் வைரஸ் தொற்று நோயின் தாக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.