சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கியது அமெரிக்கா

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கியது அமெரிக்கா

அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு காரணமாக அல்பேனியாவில் விசேட நடவடிக்கை மையத்தை திறக்க ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவ கட்டளைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் அல்பேனியா, சீனாவுடன் தொடர்ந்து உறவை வளர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டு ஆய்வாளர்கள், சீனா சமீபகாலமாக போல்கன் தீவுகளில் உள்ள நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வருவதாகவும், இது ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது போல்கன் பகுதியில் சுமார் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 135 சீன திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், இது இப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *