இந்தியாவுடன் பகை தேடாதீர்!! விநயமாக கோரிக்கை

இந்தியாவுடன் பகை தேடாதீர்!! விநயமாக கோரிக்கை

பறிமுதல் செய்த இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விட்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பறிமுதல் செய்த இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடப்போவதாக ஏற்கனவே கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வள்ளங்கள் எல்லை தாண்டி வந்த படகுகளாக இருக்கலாம். சட்டவிரோதமாக வந்தவையாக இருக்கலாம், ஆனால் தமிழகம் என்பது ஈழத் தமிழ் மக்களுடைய பாதுகாவலனாக இருக்கக் கூடிய ஒரு பிரதேசம், இரு நாடாக உள்ளது.

இது இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு பலம், தற்போது கூட அங்கு தங்கியுள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு பல்வேறு பட்ட திட்டங்களை முன்னேடுத்துள்ளனர். அவ்வாறான சூழ்நிலையில் அவர்களின் படகுகளை ஏலத்தில் விடுவது நல்லதல்ல.

தற்போது இப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கை அரசாங்கம் எம்மிடம் கடன் பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எமது படகுகளை ஏலத்தில் விடப்போகிறார்கள் என்று தமிழக மக்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில், சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளது.

ஆகவே இலங்கைத் தமிழ் மக்கள் இன்னும் தமக்கான நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் சமூகம். எங்களின் போராட்டம் முடிவடையவில்லை, போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளது. மீனவ மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது, அதை மறுக்க முடியாது.

இந்த வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஏலத்திலுள்ள படகுகள் நல்ல நிலையிலா? அல்லது பழுதடைந்த நிலையிலா? இருக்கின்றன என்பது தெரியாது. தற்போது தமிழக அரசுக்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளது.

இதனை ஏலத்தில் விடுவதை கைவிடவேண்டும். இதனை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும்” எனத் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *