ஜேர்மனியில் Malik புயல் காற்றின் தாக்கத்தால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
தலைநகர் பெர்லின் அருகே உள்ள பீலிட்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை 58 வயதுடைய நபர் ஒருவர் மீது தேர்தல் சுவரொட்டி விழுந்ததில் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வடக்கு நகரமான ப்ரெமனில் பலத்த காற்று காரணமாக மரம் விழுந்து பாதசாரி ஒருவர் காயமடைந்தார், அதே சமயம் வடகிழக்கு மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் வேரோடு சாய்ந்த மரத்தில் மோதி பலத்த காயமடைந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியில், குறிப்பாக பெர்லின், ப்ரெமென் மற்றும் ஹாம்பர்க் இடையே வடக்கு ஐரோப்பாவை தாக்கிவரும் பலத்த புயல் காணமாக சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுந்த கிளைகள் மற்றும் மரங்கள் நீண்ட தூர ரயில் சேவைகளை சீர்குலைத்தன.
சனிக்கிழமை மாலை முதல் பலத்த காற்று நகரத்தை தாக்கியதால், பெர்லினின் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
துறைமுக நகரமான ஹம்பர்க்கின் புகழ்பெற்ற மீன் சந்தை வெள்ளத்தில் மூழ்கியது மற்றும் குப்பைகள் பல சாலை வாகனங்களை சேதப்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை வானிலை சேவைகள் அதிவேக காற்று தெற்கு ஜேர்மனிக்கு பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.