கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
டிசெம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை நேற்று வரை (31) நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திருத்தங்களுக்கு உட்பட்டு இந்தச் சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.இந்த கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.