மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மாவட்டத்தில் 156 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் நேற்று சனிக்கிழமை (5) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுமன்னார் மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் (4) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது மேலும் புதிதாக 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களில் 156 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவ்வருடம் 357 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3540 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.