யாழில் நிறுத்தப்படவுள்ள வெதுப்பக உற்பத்திப் பொருட்கள்- வெளியானது அறிவிப்பு!

யாழில் நிறுத்தப்படவுள்ள வெதுப்பக உற்பத்திப் பொருட்கள்- வெளியானது அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல்  இடம்பெற்றது. அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பிறீமா விற்பனை முகவர்கள் யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனினும் எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். எனினும் எதிர்வரும் காலங்களில் மேலும் குறைக்கப்படலாம் என முகவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி நாம் செயற்படுகிறோம்.  தற்போதுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தியை குறைக்க உள்ளோம் எனினும் இது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு தெரிவிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.   

மாவட்ட அரசாங்க அதிபர் பிறீமா நிறுவனத்துடன் கலந்துரையாடி நமக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுகிறோம். ஏனைய மாவட்டங்களுக்கு  வழங்கப்படுவது போன்று பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு மா விநியோகிக்கப்படுமாக இருந்தால் வழமைபோல் உற்பத்திப் பொருட்களை மேற்கொள்ள முடியும். 

மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றது.  எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *