தனது மனைவிக்கு கூட தெரியாமல் மைத்திரி எடுத்த முடிவு

தனது மனைவிக்கு கூட தெரியாமல் மைத்திரி எடுத்த முடிவு

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாள்களின் கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, பொருளாளர், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவன்ன, தேசிய அமைப்பாளர், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்ட ஏற்பாட்டாளர்கள் சிலர் கடுமையாக தெரிவித்துள்ளனர். தாம் தொடர்ந்தும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு இந்த அரசாங்கம் இருப்பதே தடையாக உள்ளதாகவும், உரம், மின்சாரம், மின்வெட்டு அதிகரிப்பினால் வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தாம் மக்களின் வெறுப்புக்கு ஆளாவதாக சில அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் இருந்து விலக சம்மதித்துள்ள போதிலும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை அரசாங்கத்தில் நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு, இந்த அமைப்பாளர்கள் எவரும் இல்லாமல் தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறி அரச தலைவரானதை நினைவு கூர்ந்த அவர், தனது இராஜினாமா குறித்து தனது மனைவிக்கு கூட தெரியாது என்று கூறினார்.

எனினும், சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் தொடருமா இல்லையா என்பது குறித்தும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் உள்ள இரண்டு அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வார்களா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாமலேயே ஏற்பாட்டுக் கூட்டம் நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *