சீனாவிடம் முதன்முறையாக ராணுவ உதவி கோரிய ரஷ்யா

சீனாவிடம் முதன்முறையாக ராணுவ உதவி கோரிய ரஷ்யா

சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், “ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்(Jack Sullivan )திங்கள்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சி(Yang Jiechi) யை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதால், சீனா ரஷ்யாவுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவது கடினம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை கண்டிக்காத சீனா, உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது.எனினும் ரஷ்யாவின் கோரிக்கைக்கு சீனா தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *