கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை, கடந்த 4 வருடங்களாக மாணவன் ஒருவரிடம் தவறான நடத்தையில் நடந்துகொண்டு துன்புறுத்தி வந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரமவிற்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை குற்றவியல் சட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்தின் 360 (1) இ பிரிவின் கீழ் அந்த பெண் குற்றத்தை இழைத்துள்ளதாகவும், அவரை விசாரணைக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் விசாரணையை தவிர்த்து வருவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கில் முன்பிணை கோரி இன்று செவ்வாய்கிழமை (29-03-2022) நீதிமன்றில் ஆசிரியையினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அந்த மாணவனின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை அந்தப் பெண் வைப்பிலிட்டுள்ளார். பாடசாலையின் கணினி ஆய்வகத்தில் சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது 34 வயதாகும் ஆசிரியை, மாணவன் கல்வி கற்ற பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியையாக பணிபுரிந்தார்.
கடந்த 4 வருடங்களாக பாடசாலையிலும், மவுண்ட் வுவனியாவிலுள்ள ஹொட்டல் ஒன்று உட்பட பல்வேறு இடங்களிற்கும் அழைத்து சென்று மாணவனிடம் தவறாக நடத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது