மரணப் படுக்கையில் ராஜபக்சர்கள்! இறுதித் தருண அழைப்புகள் நிராகரிப்பு

மரணப் படுக்கையில் ராஜபக்சர்கள்! இறுதித் தருண அழைப்புகள் நிராகரிப்பு

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக கொலன்னாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

” வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க நாம் தயாராக இருக்கிறோம்.

நாட்டில் மேலெலுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி தான்.

எனக்கு உலகை ஆளும் பேரரசர் ஆட்சிப்பதவியை வழங்குவதாக உறுதியளித்தாலும், கள்வர் கும்பலோ அல்லது ராஜபக்சர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை.

சுமார் 150 ஆசனங்களுடன் இரண்டரை வருடங்களாக மரணப்படுக்கையில் இருந்த அரசாங்கம், இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாருங்கள் என்கிறார்கள். வந்து பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். வந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆனால், யாருடைய மனதையும் கெடுக்கும் நோக்கில் திருட்டு அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக இல்லை.

மக்கள் அபிப்பிராயத்தின் மூலம் ஆட்சி அமைக்கவே தயாராக உள்ளோம். ராஜபக்சர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட வீட்டுக்குச் செல்வது எனக்கு சுகம்” என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *