உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டெல்லியில் இந்தியத் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதால், போலந்துக்கு ஆதரவாக இராணுவ கவச வாகனங்கள் அனுப்புவதை பிரித்தானியா கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.தூதர் மெலிண்டா சிம்மன்ஸ், ரஷ்யா படையெடுத்தபோது வெளியேறிய பிறகு தற்போது அங்கு திரும்பிச் செல்வதாக கூறியுள்ளார்.
ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்ற பின்வாங்கி, கிழக்கு டான்பாஸ் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அரச தலைவர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்க இந்த மாத தொடக்கத்தில் கீவ் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.