‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் ஒன்று கூடிய இளைஞர்கள், அரச அதிகாரத்தை துறக்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (மே 1) சர்வதேச தொழிற்சங்கத்துடன் இணைந்து பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
இசை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மே தினக் கொண்டாட்டங்களை ஆக்கபூர்வமாக ஏற்பாடு செய்துள்ளதாக மே தின விழா ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 9 ஆம் திகதி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் காலி முகத்திடலில் சிங்கள இந்து புதுவருட நிகழ்வையும் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.