சந்தேக நபர்களுக்குத் தேர்தல்களில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் 

சந்தேக நபர்களுக்குத் தேர்தல்களில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறு, அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.விளக்கமறியலில் உள்ள ஒருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 9 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.அரசியலமைப்பின் கீழ், நபர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் வரை நிரபராதி என்ற அடிப்படையில், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் அனுபவிக்க அவருக்கு உரிமை உண்டு என மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குத் தேர்தல்களில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய மனுதாரர், அவர்கள் தமது ஜனநாயக உரிமையை இழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *