கேரளாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
63 பேர் பலி
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் வயநாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், பலரின் நிலை என்னவென்று தெரியாது என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிகொப்டர் மூலம் மீட்புப்படையினர் போராடி வருகின்றனர்.
முதலமைச்சர் நிவாரணம்
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அவரிடம் பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு என கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் நிதியில் இருந்து ரூ.5 கோடி வழங்குவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.