பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரு வீராங்கனை, தான் 7 மாத கர்ப்பத்துடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
ஆபத்தான விளையாட்டில் போட்டியிட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண்
ஒலிம்பிக் போட்டிகளில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ், வாள் வீச்சு போட்டியில் பங்கேற்ற நிலையில், உலகின் No 10 நிலையிலிருக்கும் அமெரிக்காவின் Elizabeth Tartakovskyயை முதல் சுற்றில் வென்றார்.
ஆனால், இரண்டாவது சுற்றில் தென்கொரியாவின் Jeon Hayoungஐ எதிர்த்து போட்டியிட்டபோது, 16ஆவது சுற்றில் தோல்வியடைந்தார்.
தான் போட்டியிலிருந்து வெளியேறியதும், இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் நாடா.
அப்போதுதான் பலருக்கும் தெரியும், நாடா ஏழு மாத கர்ப்பிணி என்பது.
இந்த போட்டியில் நாங்கள் மூன்று பேர் போட்டியிட்டோம் என்று குறிப்பிட்டுள்ள நாடா, நானும் என் போட்டியாளரும், கூடவே என் வயிற்றிலிருக்கும் என் குழந்தையும் போட்டியிட்டோம் என்று கூறியுள்ளார்.
சாதாரணமாகவே கர்ப்பமாக இருப்பது ஒரு சவால். அதிலும், வயிற்றில் ஏழு மாதக் குழந்தையுடன் விளையாடுவது எளிதான விடயமல்ல.
ஆகவே, நானும் என் பிள்ளையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டுதான் விளையாடினோம் என்கிறார் நாடா.16ஆவது சுற்றுவரை வர முடிந்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்பதை தெரியப்படுத்தவே இந்த செய்தியை எழுதுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் நாடா.