மூடிய அறைக்குள் ரணில் – மகிந்த மந்திராலோசனை

மூடிய அறைக்குள் ரணில் – மகிந்த மந்திராலோசனை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் மூடிய அறையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் – மகிந்த சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சி எடுக்கும் முடிவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று ஜனாதிபதியிடம் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்

இதேவேளை,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் நேற்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *