அன்று சுமந்திரனை துரோகியாக்கிய தமிழ் ஊடகங்கள் இன்று ?….

அன்று சுமந்திரனை துரோகியாக்கிய தமிழ் ஊடகங்கள் இன்று ?….

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

“எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மகனுக்கு அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *