home sick …..
பூவதி அக்காவின்
தெருவோர
பொட்டுக்கடையில்
தேடுவாரட்டு கிடக்கும்
பட்டுப்புளியும்,
நாவப்பழமும்
கிட்டப்போய் தட்டமுதல்,
தானாய் திறக்கும்
வெளிநாட்டு
பென்னாம்பெரிய,
கண்ணாடிக்கதவு
கடையில் கூட,
இப்பவரை தேடுகிறேன்
வேலிக்கரையில்
படர்ந்திருக்கும்
தூதுவளையும்
கறிமுருங்கு,
சண்டி இலையும்
மருந்துக்கும்
காணவில்ல
நடுச்சாம அமைதியிலும்
எங்கோ தூரத்தில்
கேக்கும்
ஒப்பாரிச் சத்தமும்
படலையில்
படுத்திருந்து
ஊளையிடும் தெரு நாயும்
இங்க இல்ல.
எல்லாம் சரியா
இருந்தும்
அதனால் தான்
என்னவோ
ஏதோ குறைவது போல ?……
(யாழ் சுதா)