குக்கலுக்கு,
ஊரில்,
சில சின்னனுகள்,
கழுத்தில்.
அடம்பிடித்து,
தொங்கவிடும்.
புங்கங்காயும்,
புலித்தோலும்,
இப்பவும்,
நினைவிருக்கு.
பயத்தால்,
அதிகம்,
அலட்டிக்கொள்ளும்.
எங்கன்ட ஊரவர்.
பெருங்காயம்,
மஞ்சளென்று,
நடக்கும்,
அடுக்குப்பெட்டியாய்.
இங்கன,
திரியினம்.
இதைச்சொல்லி,
அசூல்,
கேட்க்க,
நாடுகளும்,
தேடுவதாய்,
இன்னார்,
சொன்னதாய்,
வேறொருவர்,
சொல்லிப்போனார்.
போகும் போது,
மறக்காமல்,
பொட்டலி,
ஒன்று எனக்கும்,
தந்தார்.
இன்னும்,
கொஞ்சம்,
கூடச்சொன்னால்,
விடமாட்டான்,
தமிழன்.
கொரோனாவையும்,
பாவிக்காமல்,
என்று,
நினைத்துக்கொண்டே,
நானும்,
ஒருகையால்,
இறுக்கி பிடிக்கிறேன்,
சரக்குத்தூள்,
பொட்டலியை. ……..
(யாழ் சுதா