ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records!

ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records!

208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (logo) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரையில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுவன் ` Asia Book of Records ‘  இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

மதுரை கூடல் நகர்  ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரவீன் என்றபவரின் நான்கு வயது மகன் ப்ரஜன்,  ஆரம்பக்கல்வி படித்து வருகின்றார்.

இச்சிறுவன் அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் இலச்சினைகளைப் பார்த்தவுடன் பெயரை உடனே கூறுகிறார். தன்னுடைய இந்தத் திறமையை ஒரு வீடியோவாக பதிவு செய்து ` Asia Book of Records க்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் இலச்சினைகளை 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தியிருந்தார்.

குறித்த சிறுவனின்  இந்த திறமையை சாதனையாக ` Asia Book of Records ‘ அங்கீகரித்துள்ளது. இதற்கு முன் ` india Book of Records ‘ ல் ஒருவர் 178 நிறுவனங்களின் இலச்சினைகளை 3 நிமிடம் 49 நொடிகளில் அடையாளப்படுத்தியிருந்தார் என்ற ‘தி இந்து’ செய்தி இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *