மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று மதியம் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.