மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! பொன்சேகா

மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! பொன்சேகா

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இயக்கமே கட்டாயப்படுத்தி சிவிலியன்களை முன்னணியில் நிறுத்தி போராடினார்கள்.

அப்படியிருந்தும் நாங்கள் பலரையும் மீட்டோம். புனர்வாழ்வுக்கு அனுப்பினோம்.

இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம்.

மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது.

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது.

எமது நாட்டில் அது செய்திருந்தால் நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோ கணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப் பிரிக்க செயற்படவில்லை.

மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறியுள்ளார் என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *