கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் அதில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அறிவிப்பு பலகையின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் ரயில்வே பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் இது நிறுவப்பட்டுள்ளதாக திலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் குறித்த அறிவிப்பு பலகையை நிறுவுவதற்கு யார் காரணம் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் திலந்தா பெர்னாண்டோ கூறினார்.