உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து

உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து

சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார்.

பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார்.

அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கீனன் விடுதியொன்றிலிருந்து சக்கரக் கதிரையில் வெளியில் தள்ளி வரப்படும்போது பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருந்த தாதியர் நடைபாதையில் வரிசையாக நின்று அவருக்கு உற்சாகமளித்திருந்தனர்.

கொவிட்-19-க்கெதிராக தடுப்புமருந்தைப் பெறுவதில் முதலாவது நபராக தான் மிகவும் சலுகையுடையரவாக உணருவதாகத் தெரிவித்த கீனன், இது தனக்கு முற்கூட்டிய பிறந்தநாள் பரிசென்று கூறியுள்ளார்.

தனது பொதுசன குடித்தொகைக்கு தடுப்புமருந்தையேற்ற ஆரம்பித்த முதலாவது நாடு பிரித்தானியா ஆகும்.

இதுவரையில் கொவிட்-19-ஆல் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *