வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
புயல், மழை சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால்தான் சட்டமூலத்தை தமிழகம் வரவேற்கிறது.
விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். விருப்பப்பட்டால் மட்டுமே, தமிழக விவசாயிகள் இந்த சட்டத்தை பயன்படுத்தலாம்.
இடைத்தரகர்கள் முறையை ஒழிப்பதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலாபம் தரும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்கும்.
தமிழக விவசாயிகள் வேளாண் சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். நான் விவசாயி என்பதால், வேளாண் சட்டத்தை ஆதரிக்கிறேன்” எனவும் அவர் இவ்வாறு கூறினார்.