சீன அரசாங்கத்தின் உதவியோடு ஹரனாவில் 200 ஏக்கர் நிலத்தில் சிறைச்சாலை வளாகம் கட்ட அரசு முடிவு செய்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையை விரைவாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை புதிய சிறைச்சாலை முழுமையாக பல வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என சிறை மேலாண்மை மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சர் லோகன் ரத்வத்தே தெரிவித்தார்.
புதிய சிறைச்சாலையில் தடுத்துவைப்பதற்கான வசதி, புனர்வாழ்வு வசதி, ஒரு தொழிற்பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு வசதி என்பவற்றை கொண்டிருக்கும் என்றும், இந்த புதிய வசதியை உருவாக்க சீன அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் லோகன் ரத்வத்தே தெரிவித்தார்.