இஸ்ரேலில் வரும் 27 ஆம்திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இங்கிலாந்தில் பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, அங்கு தற்போது பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பைசர் நிறுவனத்திடம் இஸ்ரேல் அரசாங்கம் ஆர்டர் செய்திருந்த கொரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதி தற்போது வந்து சேர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி முதல் இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மக்கள் மீண்டும் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் நாட்டின் பொருளாதரம் மீண்டும் முன்னேற்றமடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.