முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமைக்கு எதிராக வவுனியாவை சேர்ந்த மௌலவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (11.12.2020) காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மௌலவி கருத்து தெரிவித்த போது,

கொரோனா ஒரு கொடிய உயிர் கொல்லி நோயல்ல, பன்றி இறைச்சியில் உள்ள வைரசைவிட கொரோனாவில் கொடிய வைரஸ்கள் கிடையாது காய்ச்சலும், தலையிடியும், சளியும்  எப்படி ஒரு மனிதனை கொல்லும். கொரோனாவுக்கு தீர்வு உடல்களை எரிப்பதா. ஏன் இந்த அநியாயத்தை முஸ்லிம்களுக்கு செய்கிறீர்கள்.

இன்றுவரை இறப்பவர் கொரானாவினால் தான் இறக்கின்றார் என்று எந்த ஒரு வைத்தியரும் நிரூபிக்கவில்லை. யார் இந்த அரசுக்கு பிடிக்காதோ அவர்களிற்கு கொரோனா என சொல்கிறார்கள்.

எனவே  பரிசோதனைக்கு செல்பவர்கள் உங்களிற்கான பரிசோதனை அறிக்கையை வைத்தியர்களிடம் கேளுங்கள். இலங்கையில் இறந்த ஒருவருக்கும் கொரோனா இல்லை. வைத்திய துறையிலேயே இருக்கும் அறிவார்ந்த வைத்தியர்கள் இந்த அதிகாரிகளிற்கு பயந்து பின்னால் நிற்கின்றார்கள். சாணக்கியன் நேர்மையாக கதைத்தார் இறைவன் அவருக்கு அருள் புரிவார். கூலிப்படைகள் அவருக்கு எதிராக கதைத்தார்கள். அரசியல் வாதிகள் கைப்பொம்மைகளாக இருக்கிறார்கள். ஆளும் கட்சியிலும்  நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் மிகவிரைவில் அவர்கள் வெளியிலே வருவார்கள். 

முள்ளிவாய்க்காலில் உரிமை கேட்டவர்களை மெனிக்பாமில் அடைத்தீர்கள் இது நியாயமா, தமிழனும், முஸ்லீமும் கதைத்தால் தீவிரவாதி. ஆட்சி வெறி, அதிகார வெறி அரசியல் துஷ்பிரயோகம் ஆகியவையே உங்களை இப்படி செய்விக்கின்றது. 

20 மாத குழந்தையை எரித்தீர்கள்.  நீங்கள் கொலை செய்து பழக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் பச்சை குழந்தைகளை கொன்றீர்கள். உங்களிடம் இரக்கம் இருக்குமா. தமிழ்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள் மூன்று இனத்தையும் அழித்த கருணா உங்களுக்கு நண்பன்  உரிமைக்காக போராடிய பிரபாகரன் பயங்கரவாதி என்றீர்கள் என தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *