மஹர சிறைச்சாலையில் பலியானோரில் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

மஹர சிறைச்சாலையில் பலியானோரில் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் உள்ளடங்கிய இரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையின்படி குறித்த சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கைதிகளின் உறவினர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்குப் பதிலாக ஆஜரான சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அவ்வாறு செய்தால் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த தீர்மானம் இன்று பிற்பகல் வழங்கப்படும் என்று வத்தளை நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *