பிரேசில் நாட்டை சேர்ந்தவர், எர்னெஸ்டோ காலியாட்டோ. இவர் டி ஜெனிரோவில் ஆவணப்படம் ஒன்று இயக்கி வந்துள்ளார்.
இதற்காக, லேண்ட்ஸ்கேப் காட்சிகளை படம்பிடிக்க சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்த அவர் 2000 அடி உயரத்தில் பயணித்தபோது தனது ஆப்பிள் ஐபோனில் பூமியை வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது வேகமாக காற்று வீசியதால் செல்போன் தவறி பூமியில் விழுந்தது.
இதையடுத்து, சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து ஐபோன் விழுந்த நிலையில் ட்ராக்கரை வைத்து தனது ஐபோனை கண்டுபிடித்துள்ளார். அதை எடுத்து பார்த்தபோது எந்த சேதாரமும் இன்றி ஐபோன் கிடந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
மேலும், அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே செல்போன் கீழே விழுந்ததால் பூமியில் விழும் வரையிலான அனைத்து காட்சிகளையும் அது பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.