நாம் தயார் – சீனாவின் பகிரங்க அறிவிப்பு

நாம் தயார் – சீனாவின் பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

ஜோ பைடன் பதவியேற்ற பின் இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ இதனை உறுதிப்படுத்தினார்.

இருநாடுகளுக்கான பொது நலன்களை மறந்துவிட்டுச் சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்ததாலேயே உறவு மோசமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா, பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், இனச் சமத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக ஜோ பைடன் கூறியுள்ளதாகவும் வாங் இ சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப் போர் மற்றும் கொரோனா விவகாரத்தால் மோதல் போக்கு ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை – தேர்தலுக்கு முன்னதாக சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என ஜோ பைடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *