இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றுகண்டறியப்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஆட்டங்கானவைத்த அடங்காப்பிடாரி கொரோனாவின் ஒரு பதியஉருமாற்றம் என தெரியவருகின்றது. கோவிட-19 க்காகஏற்றப்படட தடுப்பூசியின் தாக்கத்தினால் வீரியம்கொண்டு,திரிபடைந்து உருவாகிய வைரஸ் என வைத்திய நிபுணர்கள்சிலர் கருதுகின்றனர். இந்த வைரஸ் கோவிட் -19 ஐ விட மிகவும் வேகமாக பரவும்தன்மையுடையதென கூறுகின்றனர.
இந்த புதிய வைரஸ்டென்மார்க், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும்கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாகஐரோப்பிய நாடுகளும், தென்னாபிரிக்கா, இந்தியா, இஸ்ரவேல்,துருக்கி போன்ற நாடுகளும் பிரித்தானியாவுக்கான விமானப்பயணங்களை தடை செய்துள்ளன. இந்த வைரஸ் இலங்கைக்கும் பரவக்கூடிய சாத்தியம் அதிகஅளவில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.செத்து மடிவாள் என எதிர்பார்த்த வேளையில் முதற்பேறைபெற்றவள் இன்னும் எத்தனை கொடிய பிள்ளைகளைபெறுவாளோ! இறைவனுக்குத்தான் வெளிச்சம்.