அமெரிக்காவின் உயரிய ராணுவ மரியாதையாக கருதப்படும், ‘லீஜன் ஆப் மெரிட்’ என்ற விருதினை,பிரதமர் நரேந்திர மோடிக்கு,அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், வழங்கினார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை வலுப்பெற செய்ததற்காகவும், சர்வதேச அளவிலான சக்தியாக இந்தியாவை உருவாக்க தலைமையேற்று செயல்பட்டதற்காகவும், ‘லீஜன் ஆப் மெரிட்’ என்ற உயரிய விருதினை. பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.