ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுப்பப்பட்ட 920 மில்லியன் நிதி எங்கே?

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுப்பப்பட்ட 920 மில்லியன் நிதி எங்கே?

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம் வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்க்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலன்களிற்காக வழங்கப்பட்ட நிதி என்பதால் அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயம். எ

2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் முஸ்லீம் வேர்ல்ட் லீக்கும் கலந்துகொண்டது என தெரிவித்துள்ள அவர், அந்த அமைப்பின் தலைவர் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்ததை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க போன்றவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *