எட்டுகைதிகள் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தனர்

எட்டுகைதிகள் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தனர்

மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப்பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்;பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிரதேப்பரிசோதனையின் போது 8 பேர் துப்பாக்கிசூட்டு காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்தே மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட கலரவத்தினால் 11 கைதிகள் உயிரிழந்தமை 100ற்க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தமை குறித்த விசாரணைகளில் திருப்புமுனையேற்பட்டுள்ளது.

மஹரசிறைச்சாலை கலவரத்தில் 8 பேரின் உடல்களை பிரதேசப்பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்தனர் என்பது உறுதியாகியுள்ளது என பொலிஸ்பேச்சாளர் அஜித் ரோகண ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரம் தொடர்பில் எத்தனை பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு வியாழக்கிமை வரை காயமடைந்த கைதிகள் உட்பட 726 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மஹரசிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து கலவரங்கள் மூண்டமை குறிப்பிடத்தக்கது.
மஹரசிறைச்சாலையில் 3000 கொரோனா வைரஸ் நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை நிர்வாக அiமைச்ச மஹர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் கைதிகள் எவரும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் உயிரிழக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *