இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகும் போது நிறவெறிக்கு எதிரான தங்கள் உணபுவுகளை வெளிப்படுத்தும் நடவடிக்கையொன்றில் தென்னாபிரிக்க வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.
தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க் பௌச்சர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் இடம்பெற்ற தொடர்களின் போது முழங்காலில் அமர்ந்து நிறைவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தென்னாபிரிக்க வீரர்கள் வெளிப்படுத்தாதது குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கவலை வெளியிட்டது என அவர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்தோம் இதனடிப்படையில் இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டி ஆரம்பமாகும்வேளை நிறவெறிக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தும் செயற்பாடொன்றில் ஈடுபட தென்னாபிரிக்க வீரர்கள் தீர்மானித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நிறவெறிக்கு எதிரான தங்கள் சமிக்ஞை எவ்வாறானதாக காணப்படும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துள்ளார்.
தென்னாபிரிக்க அணியினர் கறுப்பினர்த்தவர்களின் உயிர்கள் முக்கியம் என்பது தொடர்பில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதது குறித்து தனது கவலையை வெளியிட்டிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எனினும் எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது.