கொரோனாத் தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந் நிலையில் உலகளவில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை (8,01,94,033 ) கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனாப் பாதிப்பிலிருந்து இதுவரை 5,64,60,230 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 947 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,76,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,799 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது
இந்த சூழலில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு- 1,92,09,361, உயிரிழப்பு – 3,38,263, குணமடைந்தோர் -1,12,57,711
இந்தியா – பாதிப்பு- 1,01,69,818, உயிரிழப்பு – 1,47,379, குணமடைந்தோர் – 97,39,382
பிரேசில் – பாதிப்பு – 74,48,560, உயிரிழப்பு – 1,90,515, குணமடைந்தோர் – 64,59,335
ரஷ்யா – பாதிப்பு – 29,92,706, உயிரிழப்பு – 53,659, குணமடைந்தோர் – 23,98,254
பிரான்ஸ் – பாதிப்பு – 25,47,771, உயிரிழப்பு – 62,427, குணமடைந்தோர் – 1,89,445
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
பிரித்தானியா – 22,21,312
துருக்கி – 21,18,255
இத்தாலி – 20,28,354
ஸ்பெயின் -18,69,610
ஜெர்மனி – 16,32,737
கொலம்பியா – 15,74,707
அர்ஜென்டினா – 15,74,554
மெக்சிகோ – 13,62,564
போலந்து – 12,49,079
ஈரான்- 11,89,203
உக்ரைன் – 10,12,167
பெரு – 10,05,546
தென்னாப்பிரிக்கா – 9,83,359