பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த புதியவகை வீரியமிக்க கொரோனா, அமெரிக்காவிற்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலரடோ மாகாணம் எல்பர்ட் கவுன்டியை (Elbert County) சேர்ந்த 20 வயது இளைஞருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு அக்கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கொரோனாத் தொற்று உறுதியாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பயணப் பின்னணி இல்லாத குறித்த நபருக்கு அத்தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அவருக்கு எப்படி அத்தொற்று பாதித்தது என கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவில் மேலும் பலர் அக்கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.